வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டை குழம்பு

Photo of Dal urundai kulambu by Bhuvana Selvaraj at BetterButter
469
1
0.0(0)
0

பருப்பு உருண்டை குழம்பு

Nov-28-2018
Bhuvana Selvaraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு உருண்டை குழம்பு செய்முறை பற்றி

துவரம் பருப்பு பாசிபருப்பில் புரத சத்து அதிகம். இதனை அரைத்து குழம்பாக செய்வதால் சுவையோடு சத்துக்களும் கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு 200கிராம்
  2. பாசிபருப்பு 150கிராம்
  3. தேங்காய் கீறியது 1கப்
  4. குழம்பு மசாலா 2(தே.க)
  5. சின்ன வெங்கியம் 10
  6. தக்காளி 2
  7. புளி சிறிது
  8. பூண்டு 3
  9. எண்ணெய் 3 (தேக்கரண்டி)
  10. வெந்தயம் 1(தே.க)
  11. பெரிய வெங்காயம் 1 நறுக்கியது
  12. கறிவேப்பில்லை 10இலைகள்
  13. காய்ந்த மிளகாய் 2

வழிமுறைகள்

  1. 1. துவரம் பருப்பையும்,பாசிபருப்பையும் 20நிமிடங்கள் ஊறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும்
  2. 2.அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு சிறிது சோம்பு,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து பிசையவும்
  3. 3.பிசைந்ததை உருண்டையாக பிடித்து,இட்லி பாத்திரத்தில் 10நிமிடம் வேக வைகாங வேண்டும். 4.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம்,சின்ன வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியவுடன், ஊற வைத்த புளியை கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. 5.கொதித்ததும்,குழம்பு மசாலா தூள் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அந்த வேகவைத்த பருப்பு உருண்டைகளை குழம்பில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்
  5. 6.குழம்பு நன்றாக கெட்டியாகும் போது இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்