வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி இலை பொடி

Photo of Coriander leaves powder by Deepa Srivatsan at BetterButter
1335
1
0.0(0)
0

கொத்தமல்லி இலை பொடி

Nov-28-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி இலை பொடி செய்முறை பற்றி

தயிர் சாதத்திற்கு இது மிகவும் சுவையாக இருக்கும் எனது அம்மா இதை அடிக்கடி செய்வார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொத்தமல்லி கட்டு 1
  2. மிளகாய்வற்றல் 5
  3. உளுத்தம் பருப்பு ஒரு பால் கரண்டி
  4. கடலைப் பருப்பு முக்கால் கரண்டி
  5. பெருங்காயம்- 3 சிட்டிகை
  6. புளி ஒரு சிறு புளியங்கொட்டை அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொத்தமல்லியை நன்றாக காம்பு நீக்கி தண்ணீரில் கழுவி நன்றாக வடியவிடவும்
  2. வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை போட்டு ஒரு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்
  3. பிறகு மிளகாய் வற்றலை போடவும்
  4. அதன்பின் அலசிய கொத்தமல்லியை தண்ணீர் இல்லாமல் வடித்து போடவும் பெருங்காயம் மற்றும் புளியை அதனுடன் சேர்க்கவும்
  5. 1 முதல் 2 நிமிடம் குறைந்த தீயில் நன்றாக பிரட்டி அடுப்பை அணைக்கவும் நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்