வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குழம்பு

Photo of Mutton gravy by Fathima Beevi at BetterButter
217
3
0.0(0)
0

மட்டன் குழம்பு

Nov-30-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குழம்பு செய்முறை பற்றி

மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன்- 1/2 கிலோ
  2. உருளைக்கிழங்கு-2
  3. பெரிய வெங்காயம் -1
  4. தக்காளி-2
  5. பச்சை மிளகாய்-1
  6. மிளகாய் தூள்-1/2 டீ ஸ்பூன்
  7. மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  10. உப்பு-தேவையான அளவு
  11. இஞ்சி- 1/2 இன்ச்
  12. பூண்டுபற்கள்-8
  13. பட்டை- 1/2 இன்ச்
  14. கிராம்பு-3 ஏலக்காய்-4
  15. ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு
  16. தேங்காய் துருவல்- 1/4 கப்
  17. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  18. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  19. கொத்தமல்லி இலை- 2 டேபிள் ஸ்பூன்
  20. புதினா- 1 டேபிள் ஸ்பூன்
  21. நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மட்டனை நன்றாக கழுவி எடுக்கவும்
  2. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாயை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்
  3. மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் சீரகத்தை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  4. மிக்ஸி ஜாரில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், இஞ்சி மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
  5. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. பின்பு கருலேப்பில்லை, சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்
  8. அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. பின்பு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மல்லிதூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  10. இதனுடன் கழுவி வைத்துள்ள மட்டன் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி குக்கரை மூடி 10 விசில் வரும் வரை வேக வைக்கவும்( இளம் ஆட்டுக்கறியாக இருந்தால் விசில்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளவும்)
  11. விசில் அடங்கியதும் உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.
  12. சுவையான மட்டன் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்