வீடு / சமையல் குறிப்பு / டிபன் சாம்பார்

Photo of Tiffin sambar by Karuna pooja at BetterButter
323
2
0.0(0)
0

டிபன் சாம்பார்

Nov-30-2018
Karuna pooja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டிபன் சாம்பார் செய்முறை பற்றி

எளிமையாகவும் சுவையாகவும் இட்லி தோசைக்கு உகந்த சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 100 கிராம்
  2. தக்காளி-2
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. பூண்டு 25 கிராம்
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. பச்சை மிளகாய் 4
  7. பட்டை 1இன்ச் துண்டு
  8. சோம்பு 1/2 டீஸ்பூன்
  9. கடுகு 1/4 டீஸ்பூன்
  10. தேங்காய் சிறிய துண்டு 1
  11. எண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை இரண்டு விசில்கள் விட்டு குழைய வேக விடவும்
  2. சின்ன வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கவும்
  3. வதங்கியதும் பட்டை சோம்பு சேர்த்து வதக்கவும்
  4. இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. வழங்கிய பின் நன்கு ஆற விடவும்
  6. ஆறிய பின்பு தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  7. அரைத்த விழுதை வேக வைத்த பருப்புடன் சேர்க்கவும்.. தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. ஒரு கொதி வந்ததும் கல் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்
  9. 5 நிமிடம் கொதிக்க விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டிக் கிளறவும்
  10. இப்போது இட்லி மற்றும் தோசைக்கு தேவையான சாம்பார் தயார்
  11. இது அதிகம் விருந்தாளிகள் வரும் பொழுது குறைவான பருப்பு சேர்த்து செய்யப்படும் சாம்பார் . சுவைத்து பாருங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்