Photo of Ghee rice by Wahida Abdul Hameed at BetterButter
1099
2
5.0(0)
0

நெய் சோறு

Nov-30-2018
Wahida Abdul Hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய் சோறு செய்முறை பற்றி

என் அம்மாவிடம் நான் கற்றுக்கொண்ட மிகசிறந்த ரெசிபிகளில் இதுவும் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி 3 கப் (½ கிலோ)
  2. தேங்காய்ப்பால் 6 கப்
  3. வெங்காயம்-2
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
  5. பட்டை இரண்டு துண்டுகள்
  6. ஏலக்காய் 4 அல்லது 5
  7. கிராம்பு 4
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. முந்திரி பருப்பு 8 அல்லது 10
  10. நெய் 3 மேஜைக்கரண்டி
  11. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை போட்டு லேசாக வதக்கவும்.
  2. இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. தேங்காய் பால் பிழியும்போது (தலை) முதலாம் பாலை தனியே எடுத்து வைக்கவும்.
  4. மிச்சமிருக்கிற இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய் பாலை வெங்காய கலவையுடன் ஊற்றவும்
  5. இப்போது தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  6. தேங்காய் பால் கொதி வரும் போது ஒரு மணி நேரம் ஊற வைத்த அரிசியை போடவும்
  7. மூடி போட்டு வேக விடவும், அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் தனியே எடுத்து வைத்த முதல் தேங்காய் பாலை ஊற்றி மூடி போட்டு மறுபடியும் வேக விடவும்.
  8. கமகமக்கும் நெய் சோறு தயார்.
  9. எங்கள் ஊரில் விருந்து கல்யாணம் போன்ற விசேஷங்களில் நெய் சோறு செய்வார்கள். என் தாயிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பாரம்பரியமிக்க சுவையான ஒரு ரெசிபி....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்