வீடு / சமையல் குறிப்பு / நோ ஆனியன் நோ கார்லிக் மிக்ஸடு வெஜ்ஜிஸ் குருமா

Photo of No onion no garlic mixed veggies kuruma by Krishnasamy Vidya Valli at BetterButter
383
0
0.0(0)
0

நோ ஆனியன் நோ கார்லிக் மிக்ஸடு வெஜ்ஜிஸ் குருமா

Nov-30-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நோ ஆனியன் நோ கார்லிக் மிக்ஸடு வெஜ்ஜிஸ் குருமா செய்முறை பற்றி

பண்டிகை அல்லது விரத நாட்களில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அம்மா செய்யும் குருமா இது.செய்வது மிகவும் சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு மூன்று
  2. தக்காளி-3
  3. குடைமிளகாய் பெரியது 1
  4. கேரட் 3
  5. பீன்ஸ் ஆறு முதல் எட்டு
  6. உப்பு 1 1/4 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை சிறிது
  8. அப்படியே அரைக்க தேவையானவை
  9. தேங்காய் அரை கப்
  10. பச்சைமிளகாய்-2
  11. முந்திரிப்பருப்பு 6 முதல் 8
  12. தாளிக்க தேவையானவை
  13. எண்ணெய் 3 தேக்கரண்டி
  14. சீரகம் ஒரு தேக்கரண்டி
  15. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  16. காஷ்மீரி சில்லி பவுடர் அரை தேக்கரண்டி
  17. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி (பாதியளவு வேகவைக்கும் காய்களுக்கு பயன்படுத்தவும்)

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு பீன்ஸ் கேரட் மூன்றையும் பாதியளவு மஞ்சள் பொடி தண்ணீர் விட்டு வேக வைத்து எடுக்கவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. வேகவைத்த காய்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்
  6. அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  7. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்