வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பொங்கலுடன் தயிர் தக்காளி சட்னி

Photo of Yellow pongal, curd tomato chutney by Shoba Jaivin at BetterButter
303
0
0.0(0)
0

மஞ்சள் பொங்கலுடன் தயிர் தக்காளி சட்னி

Dec-01-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பொங்கலுடன் தயிர் தக்காளி சட்னி செய்முறை பற்றி

என் பெரியம்மாவின் ரெசிபி இது தஞ்சாவூர் ஸ்டைல். மஞ்சள் பொங்கலும் தயிர் தக்காளி சட்னி .இதற்கு தாளக குழம்பும் நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி ஒரு கப்
  2. துவரம் பருப்பு கால் கப்
  3. நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்
  4. வெங்காயம் ஒன்று
  5. காய்ந்த மிளகாய் 4
  6. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  7. சட்னி செய்ய தேவையான பொருட்கள்
  8. வெங்காயம் ஒன்று
  9. தக்காளி ஒன்று
  10. தேங்காய்த்துருவல் 4 ஸ்பூன்
  11. காய்ந்த மிளகாய் ஐந்து
  12. சீரகம் ஒரு ஸ்பூன்
  13. தயிர் 3 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் வெங்காயம் வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் அரிசி மற்றும் பருப்பு தேவையான அளவு தண்ணீர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 5 விசில் வேக விட்டு எடுக்கவும்
  3. மஞ்சள் பொங்கல் தயார்
  4. தயிர் தக்காளி சட்னி செய்முறை
  5. மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாயை அரைத்துக் கொள்ளவும்
  6. வெங்காயம் தக்காளியை சிறிதாக கட் பண்ணிக் கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி குழையாமல் வதக்க வேண்டும்
  8. அதில் தேங்காய் விழுது மற்றும் 3 ஸ்பூன் தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி சூடான மஞ்சள் பொங்கல் உடன் பரிமாறவும்
  9. தயிர் தக்காளி சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்