வீடு / சமையல் குறிப்பு / அரைத்து விட்ட எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Photo of Brinjal curry by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
256
1
0.0(0)
0

அரைத்து விட்ட எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Dec-01-2018
பிரசன்னா பிரசன்னா NT
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அரைத்து விட்ட எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்முறை பற்றி

அம்மியில் அரைத்து மசாலாவை சேர்த்து செய்வது இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நாட்டு கத்தரிக்காய் கால் கிலோ
  2. தேங்காய் பெரியது அரை மூடி
  3. பூண்டு ஒரு பத்து பல்
  4. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  5. சின்ன வெங்காயம் பொடிதாக நறுகியது ஒரு கை பிடி
  6. இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. ஒரு ஸ்பூன் மல்லித்தூள்
  8. அரை ஸ்பூன் மஞ்சள்தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. தாளிக்க கடுகு,உளுந்து,கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. முதலில் பூண்டு,தேங்காய்த்துருவள்,புளி, மிழலகைத்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக தேங்காய் எண்ணெயில் மிதமான தீயில் வரத்து ஆறவைத்து அம்மியில் அரைத்து கொள்ளவும்.
  2. அரைத்த மசாலாவை கத்தரிக்காயை நான்காக கீறி அதன் உள்ளே அந்த மசாலாவை சேர்க்கவும்.
  3. ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் மசாலா சேர்த்து கத்தரிக்காயை எண்ணையில் சேர்த்து மூடி போட்டு சசிரிது நேரம் வதக்கவும்
  5. எண்ணெய்லே கத்தரிக்காய் வதங்கியதும் அம்மியில் அரைத்த மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக விடவும்.
  6. நன்றாக கொதித்து வரும்போது தேவையான உப்பை சேர்த்து கொதிவிடவும்.
  7. எண்ணெய் பிரிந்து கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்