வீடு / சமையல் குறிப்பு / அரிசி ரவை கொழுக்கட்டை மற்றும் தக்காளி மசியல்

Photo of Arisi rava kolukattai with tomatto masiyal by Deepa Srivatsan at BetterButter
472
1
0.0(0)
0

அரிசி ரவை கொழுக்கட்டை மற்றும் தக்காளி மசியல்

Dec-02-2018
Deepa Srivatsan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அரிசி ரவை கொழுக்கட்டை மற்றும் தக்காளி மசியல் செய்முறை பற்றி

அரிசியை சிறு ரவையாக உடைத்து செய்யப்படும் ஒரு கொழுக்கட்டை மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கொழுக்கட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்
  2. பச்சரிசி 2 டம்ளர்
  3. தயிர் ஒரு ஸ்பூன்
  4. கடுகு அரை டீஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. பெருங்காயம் சிறிதளவு
  9. பச்சை மிளகாய் 3 சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
  10. உப்பு தேவையான அளவு
  11. நல்லெண்ணெய் 50 மில்லி
  12. மசியல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  13. தக்காளி 6
  14. பாசிப்பருப்பு 2 கரண்டி
  15. பச்சை மிளகாய் 4
  16. மிளகாய்வற்றல் 1
  17. புளி ஒரு சிறு நெல்லிக்காயளவு
  18. சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
  19. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  20. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  21. கறிவேப்பிலை சிறிதளவு
  22. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  23. கடுகு அரை டீஸ்பூன்
  24. வெந்தயம் கால் டீஸ்பூன்
  25. உப்பு தேவையான அளவு
  26. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. இரண்டு தம்ளர் பச்சரிசியை ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும் 10 நிமிடம் ஊற வேண்டும் தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது
  2. 10 நிமிடம் கழித்து மிக்ஸியில் அதை சிறு ரவையாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. அடி கனமான வாணலி அல்லது குக்கரை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்
  4. அதன் பின் நான்கு தம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும்
  5. தண்ணீர் நன்கு கொதி வந்ததும் உடைத்து வைத்துள்ள ரவையை போட்டு நன்றாக கிளற வேண்டும்
  6. தண்ணீர் வெற்றி கெட்டியாகும் வரை சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி அடுப்பை அணைக்க வேண்டும்
  7. அதன் பின் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்
  8. அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்
  9. மசியல் செய்வதற்கு தக்காளியை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  10. புளியை நன்கு கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  11. பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  12. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வற்றலைக் கிள்ளிப்போட்டு தக்காளியைப் போட்டு நன்றாக பிரட்ட வேண்டும்
  13. அதன் பின் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் மற்றும் சாம்பார் பொடியை சேர்க்கவும்
  14. பின் புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும்
  15. நன்கு கொதி வந்ததும் வேக வைத்த பாசிப்பருப்பை போட்டு 5 நிமிடம் கழித்து கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்