Photo of Kandarappam by Pavithra Prasad at BetterButter
502
0
0.0(0)
0

கந்தரப்பம்

Dec-03-2018
Pavithra Prasad
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கந்தரப்பம் செய்முறை பற்றி

அம்மாவின் கைவண்ணத்தில் எனக்குப் பிடித்த ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி அல்லது பொன்னி அரிசி இரண்டு கிளாஸ்
  2. உளுந்து கால் கிளாஸ்
  3. வெந்தயம் அரை டீஸ்பூன்
  4. தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
  5. வெல்லம் கால் கப்
  6. ஏலக்காய் பொடித்தது கால் டீஸ்பூன்
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. பொரிக்க தேவையான எண்ணெய்

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அதேபோல் உளுந்தையும் வெந்தயத்தையும் நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. இரண்டு மணி நேரம் கழித்து மிக்ஸியில் நன்றாக கழுவிய உளுந்தையும் அரிசியையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தேங்காய், வெல்லம், ஏலக்காய் பொடித்து சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து எடுக்கவும்
  5. சட்டியில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கவும்
  6. எண்ணெய் சூடானதும் இந்த கலவையை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் விடவும்
  7. சூடான கந்தரப்பம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்