வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி கொழுக்கட்டை

Photo of Palm jaggery dumpling by Wahida Abdul Hameed at BetterButter
516
1
0.0(0)
0

கருப்பட்டி கொழுக்கட்டை

Dec-03-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி கொழுக்கட்டை செய்முறை பற்றி

சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டுமே நிறைந்த சிற்றுண்டி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 2 கப்
  2. தேங்காய் துருவல் ½ கப்
  3. சிறுபருப்பு 2 மேஜைக்கரண்டி
  4. பனங் கருப்பட்டி ½ கப்
  5. ஏலக்காய்த்தூள் ½ டீஸ்பூன்
  6. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் சிறு பருப்பை இலேசாக வறுத்து மிதமான வெந்நீரில் 2 அல்லது 3 நிமிடம் ஊறவிடவும். பின் அதை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பனங்கருப்பட்டியை போட்டு நன்றாக காய்ச்சி வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. போது ஒரு பவுலில் அரிசி மாவு, தேங்காய் துருவல், வறுத்த பாசிப்பருப்பு, வடிகட்டிய கருப்பட்டி ,ஏலக்காய்த்தூள், உப்பு, சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. கையில் எண்ணெய் தடவி பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொழுக்கட்டை வடிவத்தில் பிடித்து 25 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்