வீடு / சமையல் குறிப்பு / காய்கறி பூரி

Photo of Vegetable stuffed Poori by Divya  at BetterButter
610
0
0.0(0)
0

காய்கறி பூரி

Dec-03-2018
Divya
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி பூரி செய்முறை பற்றி

பல வகை காய்கறிகளை ஸடப்பிங் செய்து பூரியுள் வைத்து பொரித்து எடுக்கப்படும் மிக சுவையான சத்தான உணவு.இது என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிப்பி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேல் மாவிற்கு -
  2. கோதுமை மாவு 2 கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. ஸ்டஃப்பிங் செய்வதற்கு-
  5. காய்கறி கலவை (காரட், பீன்ஸ், ஊருளைகிழங்கு,பட்டாணி, நூக்கோல்)1 1/2 கப் பொடியாக நறுக்கியது
  6. வெங்காயம் 1 நறுக்கியது
  7. பச்சைமிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  8. கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. புதினா மற்றும் கொத்தமல்லி சிறிது
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  2. காய்கறிகளை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்.
  3. பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு காய்கறிகளை தனியாக வைக்கவும் (வடித்த நீரை ரசத்திலோ அல்லது சூப்பாக அருந்தலாம்).
  4. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், இஞ்சி ,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் வெந்த காய்களை சேர்க்கவும்.
  5. இவற்றோடு கரம் மசாலா தூள் சிறிது உப்பு ,கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக சிறு தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.ஸடப்பிங் தயார்.
  6. கோதுமை மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிரித்து சற்றே பெரிய பூரிகளாக தேக்கவும்.
  7. பின்னர் ஒரு மேசைக்கரண்டி அளவு ஸ்டப்பிங்கை பூரியின் நடுவில் வைத்து ஓரங்களை சோமாசிக்கு மூடுவது போல் நன்றாக மூடிவும்.
  8. இந்த பூரிகளை எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்
  9. புதினா சட்னி அல்லது சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்