வீடு / சமையல் குறிப்பு / நண்டு வறுவல்

Photo of Crab Fry by Menaga Sathia at BetterButter
1051
0
0.0(0)
0

நண்டு வறுவல்

Dec-03-2018
Menaga Sathia
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நண்டு வறுவல் செய்முறை பற்றி

மிக எளிதாக செய்யகூடிய இந்த வறுவல் மிக சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுத்தம் செய்த நண்டு -1 கிலோ
  2. நறுக்கிய வெங்காயம் -2
  3. நறுக்கிய தக்காளி -1
  4. வரமிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்
  5. தேங்காய்துறுவல் -1/2 கப்
  6. பச்சை மிளகாய் -2
  7. சோம்பு -2 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை -2 ஈர்க்கு
  9. உப்பு-தேவைக்கு
  10. எண்ணெய் -1/4 கப்
  11. பூண்டுபல் -5
  12. மிளகு -1 டீஸ்பூன்
  13. சீரகம் -1 டீஸ்பூன்
  14. இஞ்சி -1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி,பூண்டு,மிளகு,சீரகம்,பச்சை மிளகாய்,1டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி தேங்காயுடன் மைய அரைக்கவும்
  2. கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி மீதமுள்ள சோம்பு,1 ஈர்க்கு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  3. பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வதங்கியதும் நண்டு,உப்பு,அரைத்த விழுது, மிளகாய்தூள் சேர்க்கவும்
  5. தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்
  6. நன்கு வெந்து சுருள கிளறி மீதமுள்ள கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்