Photo of beef gravy by Wahida Abdul Hameed at BetterButter
2189
2
0.0(0)
0

beef gravy

Dec-03-2018
Wahida Abdul Hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 2
  2. தக்காளி 2
  3. பீஃப் ½ கிலோ
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மேஐைகரண்டி
  5. ஹோம் மேடு குழம்பு மசாலா பவுடர் 5 தேக்கரண்டி
  6. பட்டை பெரிய துண்டு
  7. ஏலக்காய் 4
  8. கிராம்பு-3
  9. மராட்டி மொக்கு 1
  10. தேங்காய் விழுது ½ கப் அல்லது தேங்காய் பால் 1 கப்
  11. உப்பு ருசிக்கேற்ப
  12. நெய்/ எண்ணெய் தேவையான அளவு
  13. கருவேப்பிலை ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் மராட்டி மொக்கு போட்டு லேசாக கிளறவும்.
  2. அத்துடன் இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன் எடுத்து கூடவே நறுக்கிய வெங்காயத்தில் சிலவற்றை எடுத்து பட்டை கிராம்பு சேர்த்து தாளிக்கவும். அத்துடன் கருவேப்பிலை சேர்த்து மிச்சமுள்ள வெங்காயத்தையும் போட்டு வெங்காயம் டிரான்ஸ்பரன்ட் ஆகும் வரை வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் மீதி உள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
  4. அத்துடன் சுத்தம் செய்து வைத்த கறியை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. அத்துடன் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
  6. தக்காளி குழையும் வரை நன்றாக கிளறவும்.
  7. இப்போது மசாலா பவுடர் சேர்க்கவும்.
  8. அத்துடன் தேங்காய் பால் அல்லது தேங்காய் விழுது கூடவே சிறிது தண்ணீர், கொத்துமல்லி சேர்த்து குக்கரை மூடி ஆறிலிருந்து ஏழு பிஎஃப் விசில் வரும் வரை அல்லது கறி யின் தன்மைக்கு ஏற்றவாறு வேகவிடுங்கள்.
  9. சுவையான பீஃப் கிரேவி தயார்.
  10. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்