வீடு / சமையல் குறிப்பு / அம்மாவின் ஞாயிறு தமாகா

Photo of Ammavin Sunday Dhamaka by Jeba Jayaseelan at BetterButter
0
1
0(0)
0

அம்மாவின் ஞாயிறு தமாகா

Dec-03-2018
Jeba Jayaseelan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அம்மாவின் ஞாயிறு தமாகா செய்முறை பற்றி

குடும்பத்தினர் விரும்பும் நெய் சோறு மற்றும் மட்டன் சாப்ஸ்

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. நெய் சோறு க்கு தேவையான பொருட்கள்
 2. நறுக்கிய முந்திரி 2 டீஸ்பூன்
 3. கிஸ்மிஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
 4. பிரியாணி இலை இரண்டு
 5. பட்டை ஒன்று
 6. பெருஞ்சீரகம் அரை டீஸ்பூன்
 7. பிரியாணி அரிசி 4 கப்
 8. தண்ணீர் தேவைக்கேற்ப
 9. புதினா இலை
 10. உப்பு தேவைக்கு ஏற்ப
 11. மட்டன் சாப்ஸ் தேவையான பொருட்கள்
 12. மட்டன் 750 கிராம்
 13. பெரிய வெங்காயம் 2
 14. சின்ன வெங்காயம் 15
 15. தக்காளி-3
 16. பச்சை மிளகாய் 3
 17. வத்தல் பொடி 2 டேபிள்ஸ்பூன்
 18. கொத்தமல்லி பொடி 3 டேபிள்ஸ்பூன்
 19. கரம் மசாலா பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
 20. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
 21. பெருஞ் சீரகம் ஒரு டீஸ்பூன்
 22. சீரகம் அரை டீஸ்பூன்
 23. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
 24. உப்பு தேவைக்கேற்ப
 25. பட்டை-2
 26. அன்னாசி பூ 1
 27. கொத்தமல்லி புதினா அரை கப்

வழிமுறைகள்

 1. குக்கரில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்கவும்
 2. நீ சூடான உடனே முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்
 3. மீண்டும் குக்கரில் நெய் சேர்த்து சூடாக்கவும்
 4. பெருஞ்சீரகம் பட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்
 5. பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
 6. இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
 7. நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
 8. வெங்காயம் வதங்கியவுடன் மிளகாய் சேர்க்கவும்
 9. தக்காளியுடன் சிறிதளவு உப்பையும் சேர்த்து கிளறி விடவும்
 10. அரிசியை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்
 11. தக்காளி வதங்கியவுடன் அரிசியை சேர்க்கவும்
 12. அரிசி உடையாத அளவு மென்மையாக கிளறி விடவும்
 13. இப்பொழுது தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்கவிடவும்
 14. மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்கவும்
 15. நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக அதில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
 16. வறுத்த முந்திரி கிஸ்மிஸ் மற்றும் வெங்காயத்தை மேலே தூவி குக்கரை மூடி விசில் வைக்கவும்
 17. ஒரு விசில் அதிக சூட்டிலும் இரண்டு விசில் மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும்
 18. சுவையான நெய் சோறு தயார்
 19. மட்டன் சாப்ஸ் செய்முறை
 20. குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்
 21. எண்ணெய் சூடான உடனே அதனுடன் சீரகம் பெருஞ்சீரகம் பட்டை சேர்த்து வதக்கவும்
 22. சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
 23. நறுக்கிய சின்ன வெங்காயம் 6 அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்
 24. நறுக்கிய பச்சைமிளகாய் அதனுடன் சேர்த்து வதக்கவும்
 25. நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விடவும்
 26. கழுவிய மட்டனை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்
 27. மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
 28. மட்டன் தண்ணீர் விட ஆரம்பித்த உடன் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்
 29. குக்கரில் 5 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வைக்கவும்
 30. மதன் வெந்துவிட்டதா என்று ஒரு முறை பார்க்கவும்
 31. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
 32. என்னை சூடானவுடன் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
 33. அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
 34. நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
 35. மசால் பொடி ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கிளறி விடவும்
 36. மசாலா பொடி நன்றாக வதங்கிய பிறகு
 37. உப்பு மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்
 38. தக்காளி நன்றாக வதங்கிய பிறகு குக்கரில் வைத்த மட்டனை இதனுடன் சேர்க்கவும்
 39. சிறிதளவு மட்டும் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்
 40. மட்டன் நன்றாக மசாலாவுடன் இணைந்த பிறகு கொத்தமல்லி மற்றும் புதினா தழை சேர்த்து இறக்கவும்
 41. தாளிப்புக்கு
 42. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
 43. சூடான எண்ணெயில் கடுகு சேர்த்து பொரிய விடவும்
 44. கடுகு நன்றாக புரிந்த பேராக கருவேப்பிலை பட்டை சீரகம் கருஞ்சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும்
 45. அன்னாசிப்பூ கிராம்பும் சேர்த்து வதக்கவும்
 46. நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
 47. பொன்னிறமாக வெங்காயம் ஆறியவுடன் எடுத்து மட்டன் சாப்ஸில் ஊற்றி கிளறி விடவும்
 48. மசாலா மட்டன் சாப்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்