வீடு / சமையல் குறிப்பு / அன்னப் பாயசம்

Photo of Anna Payasam by Sowmya Sundar at BetterButter
882
1
0.0(0)
0

அன்னப் பாயசம்

Dec-04-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அன்னப் பாயசம் செய்முறை பற்றி

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை என் அம்மா பாயசம் செய்வார்கள் . அதில் மிக பாரம்பரியமாக செய்யக்கூடிய இந்த அன்னப்பாயசமும் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 1/4 கப்
  2. பாசிப்பருப்பு 1/4 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. காய்ச்சிய பசும்பால் 2 கப்
  5. வெல்லம் 3/4 கப்
  6. ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன்
  7. முந்திரி , கிஸ்மிஸ் தலா 8
  8. நெய் 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு முதலில் முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்
  2. பின் அதே நெய்யில் களைந்த அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்
  3. பின் அதில் தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வரை வேக வைத்து கொள்ளவும்
  4. வெந்ததை சூட்டோடு கரண்டியால் நன்கு மசித்து கொள்ளவும்
  5. வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்
  6. பின் வடிகட்டிய வெல்லநீரை சேர்த்து கொதிக்க விடவும். பசும்பால், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.
  7. அன்னப்பாயசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்