வீடு / சமையல் குறிப்பு / பூரி மசால்

Photo of Poori masal by Fathima Beevi at BetterButter
0
0
0(0)
0

பூரி மசால்

Dec-04-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூரி மசால் செய்முறை பற்றி

பூரி மசால்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு- 3 வேக வைத்தது
  2. பெரிய வெங்காயம் -1
  3. தக்காளி-1
  4. பச்சை மிளகாய்-1
  5. கருலேப்பில்லை- ஒரு கைப்பிடி
  6. உப்பு- தேவையான அளவு
  7. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  9. மிளகாய் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  10. கடலை மாவு- 1/2 டேபிள் ஸ்பூன்
  11. தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  12. கடுகு- 1/4 டீ ஸ்பூன்
  13. பெருஞ்சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  14. கொத்தமல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து வைத்து கொள்ளவும்.
  3. கடலை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும்
  5. பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. நன்கு வதக்கிய பின், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.
  8. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி  ஒரு கொதி விடவும்.
  9. பின்பு கடலை மாவு கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதி வரும் வரை கிளறவும்.
  10. கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  11. சூடாக பூரியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்