வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு சுண்டல்

Photo of Horsegram sundal by Fathima Beevi at BetterButter
173
0
0.0(0)
0

கொள்ளு சுண்டல்

Dec-04-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு சுண்டல் செய்முறை பற்றி

கொள்ளு சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த கொள்ளு - 1 கப்
  2. பெரிய வெங்காயம் -1
  3. தக்காளி-1
  4. பச்சை மிளகாய்-1
  5. கருலேப்பில்லை- ஒரு கைப்பிடி
  6. உப்பு- தேவையான அளவு
  7. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  9. கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை
  10. மிளகாய் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  11. தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  12. கடுகு- 1/4 டீ ஸ்பூன்
  13. தேங்காய் துருவல்- 1 1/2 டேபிள் ஸ்பூன்
  14. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு சேர்த்து தாளிக்கவும்
  4. பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதக்கிய பின், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. வேக வைத்த கொள்ளு சேர்த்து கிளறவும்.
  7. இதனுடன் கரகரப்பாக அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
  8. மிதமான சூட்டில் 5 நிமிடம் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கிவைக்கவும்.
  9. சூடான ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்