வீடு / சமையல் குறிப்பு / பச்சைமிளகாய் தொக்கு

Photo of PACHAI MILAKAAY THOKKU by Radha Balu at BetterButter
369
0
0.0(0)
0

பச்சைமிளகாய் தொக்கு

Dec-06-2018
Radha Balu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பச்சைமிளகாய் தொக்கு செய்முறை பற்றி

இது ஊறுகாய் வகை.என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட செய்முறை இது. தோசை மற்றும் தயிர் சாதத்திற்கு சூப்பர் மேட்ச்!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை மிளகாய் ... 50 கிராம்
  2. பெருங்காயம் ... சிறுதுண்டு
  3. புளி ... சிறு எலுமிச்சை அளவு
  4. நல்லெண்ணை ... 8தேக்கரண்டி
  5. கடுகு ... 1தேக்கரண்டி
  6. உளுத்தம்பருப்பு ... 1தேக்கரண்டி
  7. வெல்லம் ... நெல்லிக்காய் அளவு
  8. உப்பு ... தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும்  அதில் பெருங்காயம் பொரித்து, அதிலேயே உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும்.
  2. மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் காம்பு கிள்ளிய மிளகாயை நன்கு வதக்கவும்.
  3. மிளகாய், நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன், பெருங்காயம், புளி,வெல்லம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.கடைசியில் உளுத்தம்பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து  மீதமுள்ள எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருள வதக்கி இறக்கவும்.
  5. சூப்பரான சுவையில் காரசாரமான மிளகாய் தொக்கு தோசைக்கும், தயிர் சாதத்துக்கும் அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்