வீடு / சமையல் குறிப்பு / இடிச்சு பிழிஞ்ச பாயாசம்

Photo of Idichu pizhinja payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
803
2
0.0(0)
0

இடிச்சு பிழிஞ்ச பாயாசம்

Dec-07-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இடிச்சு பிழிஞ்ச பாயாசம் செய்முறை பற்றி

நாகர்கோவில் திருநெல்வேலிக்கும் திருவனந்தபுரத்திற்கும் நடுவில் இருப்பதால் இரண்டு விதமான சமையல்களும் என் அம்மாவிற்கு அத்துபடி. அதில் ஒன்று கேரளா ஸ்பெஷல் இடிச்சு பிழிஞ்ச பாயாசம். பெயரிலேயே இருக்கிறது செய்முறை. அந்த காலத்தில் தேங்காயை இடிச்சு பால் பிழிந்து செய்வதால் இந்த பெயர்காரணம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 3 மேஜைக்கரண்டி
  2. வெல்லம் 1/2 கப்
  3. தேங்காய் துருவல் ஒரு கப் + 1 மேஜைக்கரண்டி (நெய்யில் வறுத்து சேர்க்க)
  4. ஏலப்பொடி கால் தேக்கரண்டி
  5. நெய் 1 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு 10

வழிமுறைகள்

  1. தேங்காய்த்துருவல் தண்ணீர் சேர்த்து முறையே முதல் இரண்டு மற்றும் மூன்று பால் எடுத்துக் கொள்ளவும்
  2. அரிசியை தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வெந்த சாதத்தில் மூன்றாவது பால் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்
  4. கடாயில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்
  5. பச்சை வாசனை போனவுடன் சாதம் சேர்த்து கிளறவும்
  6. சிறிது கெட்டியானதும் இரண்டாவது பால் சேர்த்து ஒரு கொதி விடவும்
  7. முதல் பால் ஏலப்பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  8. நெய்யில் முந்திரிப் பருப்பு தேங்காய்த் துருவல் வறுத்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்