வீடு / சமையல் குறிப்பு / புளியானம்/ ரசம்

Photo of puliyaanam/ rasam by Wahida Abdul Hameed at BetterButter
452
0
0.0(0)
0

புளியானம்/ ரசம்

Dec-08-2018
Wahida Abdul Hameed
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புளியானம்/ ரசம் செய்முறை பற்றி

என் அம்மாவின் கைமணத்தில் என்னுடைய ஆல் டைம் பேவரைட் இந்த ரசம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி எலுமிச்சைப்பழ அளவு
  2. மிளகு 1 ஸ்பூன்
  3. சீரகம் 1 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 1
  5. காய்ந்த மிளகாய் 1
  6. பூண்டு 4 அல்லது 5 பல்
  7. கருவேப்பிலை ஒரு கொத்து காம்புடன்
  8. உப்பு ருசிக்கேற்ப
  9. தக்காளி 1( ஆப்ஷனல்)
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. சீரகம் 1 ஸ்பூன்
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. மஞ்சள்தூள் ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு உரலில் அல்லது மிக்ஸியில் மிளகு, சீரகம் பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்து காம்புடன் போடவும்,
  2. மேலும் அதனுடன் பூண்டு தோல் உரிக்காமல் தோலோடு போடணும். விருப்பப்பட்டால் ஒரு தக்காளி சேர்த்து இடி உரலில் நன்றாக இடிக்கவும் அல்லது மிக்ஸியில் கரகரப்பாக திரித்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், கருவேப்பிலைபோட்டு தாளிக்கவும். கூடவே மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அதனுடன் ஒரு காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டு சேர்க்கவும்.
  4. தாளிப்பு உடன் அரைத்த விழுதையும் புளிக்கரைசலையும் சேர்த்து நன்றாக கலக்கி கொதி வரும்வரை வைத்து இறக்கி விடவும்.
  5. சுவையான ரசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்