வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (அம்மாவின் ஸ்டைல்)

Photo of Stuffed Ennai katharikai kuzhambu (ammavin style) by Krishnasamy Vidya Valli at BetterButter
670
0
5.0(0)
0

ஸ்டப்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (அம்மாவின் ஸ்டைல்)

Dec-08-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (அம்மாவின் ஸ்டைல்) செய்முறை பற்றி

ஒருவர் அல்லது இரண்டு நபர்கள் மட்டும் வீட்டில் இருக்கும் பொழுது குழம்பு கறி என்று தனித்தனியாக சமைப்பதற்கு பதில் இந்த குழம்பு செய்வார்கள். குழம்பாகவும் பிசைந்து சாப்பிடலாம். கறியாகவும் தொட்டுக்கொள்ளலாம். நோ ஆனியன் நோ கார்லிக் ரெசிபி என்பதால் என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிஞ்சு பொடி கத்திரிக்காய் 8 முதல் 10
  2. புளி பாதி எலுமிச்சை அளவு
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. வறுத்து பொடி செய்ய தேவையானவை
  7. எண்ணெய் இரண்டு சொட்டுகள்
  8. கடலைப்பருப்பு 2 மேசைக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  10. மிளகாய்வற்றல் 5 முதல் 7
  11. கட்டி பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  12. தாளிக்க தேவையானவை
  13. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  14. கடுகு வெந்தயம் சீரகம் தலா அரை தேக்கரண்டி
  15. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  16. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  17. மிளகாய்வற்றல் 1

வழிமுறைகள்

  1. வறுத்து பொடி செய்ய கொடுத்தவற்றை வறுத்து பாதியளவு உப்பு சேர்த்து கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்
  2. கத்தரிக்காயை நான்காக வகிர்ந்து கொதிக்கும் வெந்நீரில் 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து பின்னர் அதில் திரித்த பொடியை அடைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து பொடி அடைத்துவைத்த கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்
  4. புளியைக் கரைத்து விட்டு மீதமுள்ள உப்பு மஞ்சள் பொடி வெல்லம் மற்றும் மீதமுள்ள வறுத்து திரித்த பொடி சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  5. குழம்பு சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்