Photo of Ajwain rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
904
0
0.0(0)
0

ஓமம் ரசம்

Dec-08-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓமம் ரசம் செய்முறை பற்றி

பசியின்மைக்கு எளிமையான ஆரோக்யமான மருந்து இந்த ஓமரசம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி ஒன்று அல்லது இரண்டு
  2. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  3. உப்பு 1/2 தேக்கரண்டி
  4. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. வறுத்து பொடி செய்ய
  8. நெய் 1/2 தேக்கரண்டி
  9. துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
  10. மிளகாய் வற்றல் 1
  11. சீரகம் 1/4 தேக்கரண்டி
  12. மிளகு 1/4 தேக்கரண்டி
  13. ஓமம் 1 தேக்கரண்டி
  14. பெருங்காயம் 2 சிட்டிகை
  15. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  16. தாளிக்க
  17. நெய் 1/2 தேக்கரண்டி
  18. கடுகு சீரகம் தலா 1/4 தேக்கரண்டி
  19. மிளகாய் வற்றல் 1
  20. கருவேப்பிலை 1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். வறுக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு சீரகம் ஓமம் சேர்க்கவும்.
  2. கடாயில் புளியை கரைத்து விட்டு தக்காளி உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து ஒரு கொதி விடவும்
  3. திரித்த பொடியை சேர்த்து நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொத்தமல்லி இலை தூவி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்