வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை சுண்டல்

Photo of Channa sundal by Fathima Beevi at BetterButter
353
0
0.0(0)
0

கொண்டைக்கடலை சுண்டல்

Dec-08-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை பற்றி

கொண்டைக்கடலை சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொண்டைக்கடலை- 1 கப்
  2. பெரிய வெங்காயம்- 1/2
  3. பூண்டு பற்கள்-6
  4. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  5. பச்சை மிளகாய்-1
  6. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  7. தேங்காய் துருவல்- 1 டேபிள் ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  9. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  10. கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை
  11. உப்பு- தேவையான அளவு
  12. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  13. கொத்தமல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன்
  14. கடுகு- 1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  2. நன்றாக ஊறிய பின் கழுவி விட்டு குக்கரில் சிறிது உப்பு மற்றும் தண்ணீருடன் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டுபற்களை நறுக்கி கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
  5. பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், பூண்டுபற்கள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
  6. நன்கு வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலையை தண்ணீரை வடிகட்டி பின்பு கடாயில் சேர்த்து கிளறவும்.
  7. இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
  8. ஒரு 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  9. கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்