வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பொரியல்

Photo of Rich card poriyal by sudha rani at BetterButter
42
0
0.0(0)
0

பீர்க்கங்காய் பொரியல்

Dec-08-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பொரியல் செய்முறை பற்றி

இப்போது எவ்வளவு விதம் விதமாக செய்தாலும் அப்ப அம்மா செய்த மாதிரி வராது வெறும் பச்சை மிளகாய் காரத்தோட வெறும் பீர்க்கங்காய் மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் 1/2 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1 சிறிது
  4. பச்சை மிளகாய் 4
  5. கறிவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி தழை
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
  9. முழு உளுந்து 1 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் 1 மூடி
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயின் தோல் சீவி நறுக்கி அலசி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து
  3. பின் பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து உப்பு தூவி வதக்கவும்
  6. மெல்லிய தீயில் சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் மூடிவைத்து அவ்வப்போது கிளறி வேகவிடவும்
  7. பின் தேங்காய் துருவல் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்