வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு சாம்பார்

Photo of Moong dal potato sambar by Krishnasamy Vidya Valli at BetterButter
714
0
0.0(0)
0

பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு சாம்பார்

Dec-09-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு சாம்பார் செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள என் அம்மா செய்யும் சிம்பிள் சாம்பார் இது. நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்த்தால் விரதநாட்கள்/பண்டிகை நாட்களில் கூட செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு கால் கப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. தக்காளி-2
  4. புளி நெல்லிக்காய் அளவு(இந்த சாம்பார் புளிப்பு குறைவாக இருக்கும் விருப்பப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்)
  5. உப்பு ஒரு தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  7. சாம்பார் பொடி 1 தேக்கரண்டி(மைல்டான காரமாக இருக்கும் விருப்பப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்)
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  9. தாளிக்க தேவையானவை
  10. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  11. கடுகு வெந்தயம் சீரகம் தலா ஒரு தேக்கரண்டி
  12. மிளகாய்வற்றல் 1
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  14. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  15. பச்சை மிளகாய் 1 அல்லது 2

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. பாசிப்பருப்பு மஞ்சள் பொடி உருளைக்கிழங்கு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைத்து எடுக்கவும்
  3. வதக்கிய தக்காளியில் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் உப்பு வேக வைத்த உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு கலவை, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்
  4. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்