Photo of Cumin rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
307
0
0.0(0)
0

சீரக ரஸம்

Dec-09-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீரக ரஸம் செய்முறை பற்றி

பருப்பு தக்காளி இல்லாத எளிமையான ரசம். சூப் போன்று குடிக்கவும் செய்யலாம். அம்மா இந்த ரசம் செய்து முடித்தவுடன் வீட்டில் எல்லோரும் ஆளுக்கு ஒரு கப் குடித்து விடுவோம். மதியம் மீண்டும் ஒருமுறை அம்மா ரசம் செய்ய வேண்டியது வரும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  2. உப்பு 1/2 தேக்கரண்டி
  3. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  4. மஞ்சள் பொடி 4 சிட்டிகை
  5. வறுத்து அரைக்க
  6. துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
  7. சீரகம் 1 தேக்கரண்டி
  8. மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு
  9. மிளகு 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் மட்டும்)
  10. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  11. கொத்தமல்லி விதை 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் மட்டும்)
  12. நெய் 1/4 தேக்கரண்டி
  13. தாளிக்க
  14. நெய் 1/2 தேக்கரண்டி
  15. கடுகு 1/4 தேக்கரண்டி
  16. சீரகம் 1/2 தேக்கரண்டி
  17. பெருங்காயம் 2 சிட்டிகை
  18. கருவேப்பிலை 1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து கொள்ளவும் வறுக்கும் பொழுது சீரகத்தை அடுப்பை அணைத்து விட்டு சேர்க்கவும்.
  2. ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  3. கடாயில் புளியைக் கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  4. அரைத்த விழுது சேர்த்து கொதி வந்து நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்
  5. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்