வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு வெங்காய சாம்பார்

Photo of Moongdal Onion Sambar by Sowmya Sundar at BetterButter
369
0
0.0(0)
0

பாசிப்பருப்பு வெங்காய சாம்பார்

Dec-09-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு வெங்காய சாம்பார் செய்முறை பற்றி

துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு சேர்த்து செய்த சின்ன வெங்காய சாம்பார்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 15
  2. பாசிப்பருப்பு அரை கப்
  3. பச்சைமிளகாய்-2
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. கடுகு வெந்தயம் தலா அரை டீஸ்பூன்
  7. மிளகாய் வற்றல் 1
  8. புளி எலுமிச்சை அளவு
  9. மஞ்சள் பொடி 1/2 + 1/2 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. சாம்பார் பொடி இரண்டு டீஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் பாசிப்பருப்பை மஞ்சள் பொடி, தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம்,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி ,உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. பின் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
  4. அதன் பின் சாம்பார் பொடி சேர்த்துக் கொதித்ததும் வெந்த பாசிப்பருப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்
  5. கொத்தமல்லித்தழை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்