வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சாதத்துடன் பொடி கத்திரிக்காய் வறுவல்

Photo of Raw Mango Rice with Podi Brinjal Fry by Hameed Nooh at BetterButter
426
2
5.0(0)
0

மாங்காய் சாதத்துடன் பொடி கத்திரிக்காய் வறுவல்

Dec-09-2018
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சாதத்துடன் பொடி கத்திரிக்காய் வறுவல் செய்முறை பற்றி

என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட சுவையான மாங்காய் சாதம் மற்றும் பொடி கத்திரிக்காய் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ரோசஸ்டிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் சாதத்திற்கு :
  2. துருவிய மாங்காய் ஒரு கப்
  3. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  4. கடுகு ஒரு தேக்கரண்டி
  5. கடலை பருப்பு ஒரு தேக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  7. வேர்க்கடலை 2 மேஜைக்கரண்டி
  8. பச்சைமிளகாய்-2
  9. வரமிளகாய்-2
  10. கருவேப்பிலை ஒரு கீற்று
  11. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  12. பெருங்காயத் தூள் கால் தேக்கரண்டி
  13. துருவிய தேங்காய் கால் கப்
  14. எண்ணெய் தாளிப்பதற்கு
  15. உப்பு சுவைக்கேற்ப
  16. பொடி கத்தரிக்காய் வறுவலுக்கு :
  17. சிறிய கத்தரிக்காய் ஐந்து
  18. கடுகு ஒரு தேக்கரண்டி
  19. கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
  20. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  21. கருவேப்பிலை ஒரு கீற்று
  22. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  23. எண்ணை 4 மேஜைக்கரண்டி
  24. உப்பு தேவையான அளவு
  25. பொடி மசாலா அரைப்பதற்கு :
  26. கடலைப்பருப்பு 3 மேஜைக்கரண்டி
  27. மல்லி ஒரு தேக்கரண்டி
  28. வேர்க்கடலை ஒரு மேஜைக்கரண்டி
  29. வெள்ளை எள் 2 மேஜைக்கரண்டி
  30. வர மிளகாய் 4
  31. மிளகு அரை தேக்கரண்டி
  32. புளி சிறிய துண்டு
  33. துறுவிய தேங்காய் கால் கப்

வழிமுறைகள்

  1. மாங்காய் சாதம் செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை போட்டு சிறிது நேரம் தாளிக்கவும்
  3. பிறகு அதோடு நறுக்கிய வர மிளகாய் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
  4. இனி துருவிய மாங்காய் உடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்
  5. அதிலே வேகவைத்த பாசுமதி அரிசியை போட்டு மெதுவாக கிளறி ஒரு நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
  6. இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து சிறிது கிளறி விட்டு அடுப்பிலிருந்து எடுக்கவும்
  7. சுவையான மாங்காய் சாதம் தயார் இனி அதற்கு ஏற்றார்போல் பொடி கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
  8. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடி மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும்
  9. பிறகு அதனை மிக்ஸியில் சிறிது உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும்
  10. கத்தரிக்காயில் மேலே உள்ள காம்பை பாதியாக வெட்டி பிறகு அதனை 6 முதல் 8 பாகங்களாக கீறிக் கொள்ளவும்
  11. இனி அரைத்து வைத்த பொடியை சிறிதளவு எடுத்து கத்தரிக்காயின் உள்ளே வைத்து அழுத்தவும்
  12. இனி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்
  13. பிறகு அதனை பொடி மசாலா வைத்த கத்தரிக்காயுடன் சேர்த்து மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்
  14. அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்
  15. கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் மீதமுள்ள பொடியை தூவி கிளறி இறக்கவும்
  16. இப்பொழுது முறுமுறுப்பான பொடி கத்தரிக்காய் வறுவல் தயார்.
  17. மாங்காய் சாதத்துடன் சாப்பிட ஏற்ற சுவையான பொடி கத்தரிக்காய் வறுவலும் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்