வீடு / சமையல் குறிப்பு / நண்டு மசாலா

Photo of Nandu masala by Kiruthiga Ammu at BetterButter
442
1
0.0(0)
0

நண்டு மசாலா

Dec-09-2018
Kiruthiga Ammu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நண்டு மசாலா செய்முறை பற்றி

அம்மாவின் கைவண்ணத்தில் ஈஸியான நண்டு மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக்க தேவையானவை
  2. தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  5. மிளகு ஒரு மேஜைக்கரண்டி
  6. தேங்காய் ஒரு கப் துருவியது
  7. நண்டு மசாலா செய்ய
  8. நண்டு ஒரு கிலோ
  9. தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன்
  10. கடுகு ஒரு டீஸ்பூன்
  11. கருவேப்பிலை 10
  12. பச்சை மிளகாய் 4
  13. வெங்காயம் 3
  14. தக்காளி-2
  15. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  16. மல்லிதூள் 3 டேபிள்ஸ்பூன்
  17. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  18. தண்ணீர் 1 1/2 கப்
  19. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மசாலா கொடுத்திருக்க பொருள் எல்லாத்தையும் தேங்காய் தவிர சேர்த்து நல்லா வாசனை வர வறுக்கணும்.
  2. அப்புறமா துருவி வச்சிருக்க ஒரு கப் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  3. இது எல்லாத்தையும் கிரைண்டரில் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நல்ல மைய அரைச்சுக்கணும்.
  4. இப்போ நண்டு மசாலா செய்யறதுக்கு தேங்காய் எண்ணை 4 மேஜைக்கரண்டி சேர்த்து
  5. கடுகு ஒரு டீஸ்பூன் கொஞ்சம் கருவேப்பிலை 4 பச்சை மொளகா இதெல்லாம் சேர்ந்து நல்ல பொரியவிடவும்
  6. 3 வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து நன்றாக பொன்னிறமாக அளவு வதக்கணும்
  7. தக்காளி 3 பொடியாக நறுக்கியது சேர்த்து மசிய அளவுக்கு வதக்கணும்
  8. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி மல்லித்தூள் 3 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போக அளவுக்கு நல்ல வதக்கணும்
  9. இப்போ நம்ம அரைத்து வச்சிருக்க பேஸ்ட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரை கப் தண்ணி ஊத்தி நல்லா எண்ணெய் பிரிஞ்சு வரவிருக்கும் வதக்கணும்
  10. எண்ணெய் பிரிந்து வந்ததும் நண்டு ஒரு கிலோ அதுகூட சேர்த்து ஒரு கிளறு கிளறவும்
  11. இப்போ இதுகூட ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நல்லா சுண்டி வரவிருக்கும் வதக்கணும்
  12. இப்போ மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்