BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / திரிபாகம்

Photo of Thiribhagam by Krishnasamy Vidya Valli at BetterButter
159
0
0(0)
0

திரிபாகம்

Dec-09-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திரிபாகம் செய்முறை பற்றி

திருநெல்வேலியின் பாரம்பரியமான இனிப்பு வகை இது. செய்வது சலபம். பாகு கம்பி பதம் எல்லாம் இல்லை .மூன்று வகையான இனிப்புகளின்(மைசூர் பாகு, முந்திரி பாதாம் அல்வா,பால்கோவா) கலவையில் அருமையான சுவையில் இருக்கும். தீபாவளிக்கு அம்மா செய்யும் இனிப்பு வகைகளில் முக்கியமான ஒன்று. எந்த பண்டிகைகாலத்திற்கும் ஏற்ற இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 11/4 கப் +1 மேஜைக்கரண்டி சூடு பால் (குங்குமப்பூ வை ஊறவைப்பதற்கு)
  2. கடலைமாவு 1/2 கப்
  3. பாதாம் முந்திரி சேர்த்து 1/2 கப்
  4. சீனி 1 கப்
  5. குங்குமப்பூ சிறிது
  6. பச்சகற்பூரம் சிறிது
  7. நெய் 1 கப்

வழிமுறைகள்

  1. பாதாம் முந்திரியை மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்
  2. கடாயில் சிறிது நெய் விட்டு கடலை மாவை பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்
  3. அடுப்பிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் அரிப்பை வைத்து நன்றாக அரித்துக் கொள்ள வேண்டும்
  4. அதோடு பால் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  5. சீனி சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  6. பொடித்த பாதாம் முந்திரி சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  7. கடாயில் நெய் விட்டு செய்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பில் நேரடியாக ஒவ்வொன்றாக சேர்த்தும் கிளறலாம். ஆனால் கெட்டிதட்டாமல் கைவிடாமல் கிளற வேண்டும்.
  8. சிறிது சூடு பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்
  9. பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்க்கவும்
  10. சுருளக் கிளறி பச்ச கற்பூரம் சேர்த்து இறக்கவும்
  11. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்