வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் புளிசேரி

Photo of Raw mango puliseri by Krishnasamy Vidya Valli at BetterButter
288
0
0.0(0)
0

மாங்காய் புளிசேரி

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் புளிசேரி செய்முறை பற்றி

கேரளாவின் மிகவும் பிரபலமான புளிசேரி வெரைட்டிகளில் ஒன்று இது. அப்பாவிற்கு பிடிக்கும் என்பதால் அம்மா அடிக்கடி செய்வார்கள். இப்பொழுதொல்லாம் மாங்காய் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாங்காய் 1
  2. புளிக்காத கெட்டி தயிர் 1/2 கப்
  3. உப்பு 1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  5. அப்படியே அரைக்க
  6. தேங்காய் துருவல் 1/3 கப்
  7. பச்ச மிளகாய் 2 அல்லது 3
  8. சீரகம் 1/2 தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. தேங்காய் எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/2 தேக்கரண்டி
  12. மிளகாய் வற்றல் 1
  13. கருவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த விழுதை தயிரில் கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  4. மாங்காய் நன்றாக வெந்தவுடன் செய்து வைத்த தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்