Photo of Kalyana rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
151
0
0.0(0)
0

கல்யாணரசம்

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கல்யாணரசம் செய்முறை பற்றி

நானும் அப்பா அம்மாவும் ரசப்பிரியர்கள். நேரம் காலமே இல்லாமல் எப்பொழுது கொடுத்தாலும் ரசம் சாப்பிடுவோம். வாரத்தில் நான்கு நாட்கள் கண்டிப்பாக சமையலில் ரசம் வந்துவிடும். கல்யாணங்களில் வைக்கும் ரசம் அதிக வாசனையுடன் இருக்க காரணம் பிரஷ்ஷாக பொடி திரித்து கடைசியில் சேர்ப்பதும் தக்காளியை அரைத்து சேர்ப்பதும் தான்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி 2 அல்லது 3
  2. புளி பாதி எலுமிச்சை அளவு
  3. மஞ்சள் பொடி 1/8 தேக்கரண்டி
  4. உப்பு 1/2 தேக்கரண்டி
  5. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  6. கொத்துமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  7. துவரம் பருப்பு 2 மேஜைக்கரண்டி
  8. வறுத்து பொடி செய்ய
  9. துவரம்பருப்பு 1 தேக்கரண்டி
  10. கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி
  11. மிளகு 1/4 தேக்கரண்டி
  12. மிளகாய்வற்றல் 2
  13. சீரகம் அரை தேக்கரண்டி
  14. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  15. நெய் கால் தேக்கரண்டி
  16. தாளிக்க தேவையானவை
  17. நெய் அரை தேக்கரண்டி
  18. கடுகு அரை தேக்கரண்டி
  19. சீரகம் அரை தேக்கரண்டி
  20. மிளகாய்வற்றல் 1
  21. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  22. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வறுக்கக் கொடுத்தவற்றை வறுக்கவும். வறுக்கும் பொழுது ஜீரகத்தை அடுப்பை அணைத்து விட்டு சேர்க்கவும் வறுத்ததும் சிறிது ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்
  2. துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுக்கவும்
  3. வெந்ததும் சிறிது தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. பாத்திரத்தில் புளி கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி வெல்லம் தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்
  6. அரைத்த தக்காளி வேகவைத்த பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  7. தேவையான அளவு தண்ணீர் விட்டு ரசத்தை விளாவிக்கொள்ளவும்.
  8. வறுத்து பொடி செய்ததை சேர்க்கவும்
  9. பொடி போட்டு அதிக நேரம் கொதிக்க தேவையில்லை நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்
  10. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்