வீடு / சமையல் குறிப்பு / சேனை புழுக்கு

Photo of Yam (Senai) puzhukku by Krishnasamy Vidya Valli at BetterButter
548
0
0.0(0)
0

சேனை புழுக்கு

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேனை புழுக்கு செய்முறை பற்றி

கேரளாவின் முக்கியமான தொடு கறிவகைகளில் ஒன்று புழுக்கு. இதை சேனை, சக்கை, வாழைக்காய், பயறு போன்றவற்றில் செய்வாரகள். ஆனால் என அம்மா சேனையில் அடிக்கடி செய்வார்கள. சக்கை சீசனில் கறிசக்கையில் செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடியாக சதுரம் சதுரமாக நறுக்கிய சேனைக்கிழங்கு ஒரு கப்
  2. உப்பு அரை தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  4. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  5. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  6. அப்படியே அரைக்க
  7. தேங்காய் துருவல் 1/4 கப்
  8. பச்சை மிளகாய் மிளகாய் வத்தல் தலா 1
  9. சீரகம் அரை தேக்கரண்டி
  10. தாளிக்க(விருப்பப்பட்டால் மட்டுமே)
  11. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  12. மிளகாய்வற்றல் 1
  13. கடுகு அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சேனையை தோல் சீவி பொடியாக சதுரம் சதுரமாக நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  2. அரைக்கக் கொடுத்தவற்றை தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  3. கடாயில் வேக வைத்த சேனைக்கிழங்கு அரைத்த விழுது சேர்த்து கிளறவும்
  4. கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கவும்
  5. விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெயில் கடுகு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்