வீடு / சமையல் குறிப்பு / சின்ன வெங்காய மண்டி

Photo of Small Onion Mandi by Sowmya Sundar at BetterButter
651
0
0.0(0)
0

சின்ன வெங்காய மண்டி

Dec-10-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சின்ன வெங்காய மண்டி செய்முறை பற்றி

சின்ன வெங்காயத்தில் புளிக்கரைசல் சேர்த்து செய்யும் இந்த மண்டி தயிர் சாதம், இட்லி , தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உரித்த சின்ன வெங்காயம் ஒரு கப்
  2. புளி எலுமிச்சை அளவு
  3. அரிசி களைந்த நீர் 1 கப்
  4. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  5. பச்சைமிளகாய்-2
  6. மிளகாய்வற்றல் 2
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. வெல்லம் 1 சிறிய துண்டு
  10. கடுகு வெந்தயம் தலா கால் டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளியை அரிசி களைந்த நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை,மிளகாய் வற்றல் தாளித்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் மஞ்சள் தூள் , உப்பு புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு வற்ற விடவும்
  4. நன்கு கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்