வீடு / சமையல் குறிப்பு / அம்மாவின் ஸ்பெஷல் வெற்றிலை வடை

Photo of Mom's Special Betel Leaves Vadai by Sowmya Sundar at BetterButter
515
1
0.0(0)
0

அம்மாவின் ஸ்பெஷல் வெற்றிலை வடை

Dec-10-2018
Sowmya Sundar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அம்மாவின் ஸ்பெஷல் வெற்றிலை வடை செய்முறை பற்றி

வெற்றிலை மற்றும் பச்சைபயிறு சேர்த்து செய்த அம்மா ஸ்பெஷல் வடை.வெற்றிலை சளி இருமல் ஜீரணத்திற்கும் சிறந்த மருந்தாகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெற்றிலை 10
  2. பச்சைப்பயறு ஒரு கப்
  3. சின்ன வெங்காயம் 6
  4. பச்சைமிளகாய்-3
  5. இஞ்சி ஒரு துண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. கறிவேப்பிலை மல்லி சிறிதளவு
  8. எண்ணெய் பொரிக்க(டீப் ப்ரை செய்ய)

வழிமுறைகள்

  1. பச்சைப்பயிறை தண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் தண்ணீரை முழுவதும் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வடை மாவு கெட்டியாக இருப்பது முக்கியம்.
  3. அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெற்றிலை, கறிவேப்பிலை ,சின்ன வெங்காயம் ,கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும். குறிப்பு : வெற்றிலையின் காம்பை கிள்ளி விட்டு நறுக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறுசிறு வடைகளாக தட்டி போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்