வீடு / சமையல் குறிப்பு / அரைப்புளி குழம்பு

Photo of Arai puli kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
504
0
0.0(0)
0

அரைப்புளி குழம்பு

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைப்புளி குழம்பு செய்முறை பற்றி

அரைப்புளி குழம்பு என்றால் அரைத்துவிட்ட புளிக்குழம்பு என்று அர்த்தம். புளிக்குழம்பு போன்று இருக்கும். ஆனால் வறுத்து அரைக்க வேண்டும். பிட்லா போன்று வறுத்து அரைக்க வேண்டும் ஆனால் வேகவைத்த பருப்பு கிடையாது. காராமணி அல்லது கொண்டகடலை சேர்ப்பதால் கூடுதல் ஆரோக்யம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருணைக்கிழங்கு 2
  2. கருப்பு கொண்டைக்கடலை கால் கப்
  3. புளி ஒரு எலுமிச்சை அளவு
  4. உப்பு 11/4 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  6. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  7. சாம்பார் பொடி ஒரு தேக்கரண்டி
  8. எண்ணெய் 3 தேக்கரண்டி
  9. வறுத்து அரைக்க தேவையானவை
  10. உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  11. மிளகாய் வத்தல் 3 அல்லது 4
  12. தேங்காய் துருவல் கால் கப்
  13. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  14. தாளிக்க
  15. எண்ணெய் 1/2 மேஜைக்கரண்டி
  16. கடுகு ஒரு தேக்கரண்டி
  17. மிளகாய்வற்றல் 1
  18. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  19. தேங்காய் பல் கீறியது 2 அல்லது 3 மேஜைக்கரண்டி
  20. கருவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கருணைக் கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  2. கொண்டைக்கடலையை 4 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  3. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கருணைக்கிழங்கை வதக்கவும்
  5. மஞ்சள் பொடி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
  6. வேகவைத்த கொண்டைக்கடலை சேர்க்கவும்
  7. புளியைக் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்
  8. அரைத்த விழுது உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவும்
  9. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  10. சூடு சாதத்துடன் பரிமாறவும். குழம்பில் ஊறிய தேங்காய் கீற்றுகள் கருணைக்கிழங்கு கொண்டகடலை சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையே தனிதான்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்