வீடு / சமையல் குறிப்பு / மட்டன்உப்புகண்டம்மசால்

Photo of Muttanuppukandam masal by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
194
0
0.0(0)
0

மட்டன்உப்புகண்டம்மசால்

Dec-10-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
14400 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன்உப்புகண்டம்மசால் செய்முறை பற்றி

கிராமத்தில் முழுஆடாக வெட்டி சமைத்தது போகமீதி கறியை மஞ்சள் கல்உப்பு மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து நூலில் கோர்த்து வெயிலில் காயவைத்து வைத்திருப்பர் தேவைப்படும்போது எண்ணையில் பொறித்தும் காரக்குழம்பிலும் மசால்சேர்த்தும் வைப்பர் அம்மா அப்பத்தா செய்து கொடுப்பாங்க இப்பவாய்ப்பு கிடைத்தது நம் தோழிகளுக்காக அம்மாகைவண்ணம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உப்புக்கண்டம் 150Gm
  2. சின்ன வெங்காயம் 150gm
  3. பச்சை மிளகாய் 3
  4. தக்காளி 150Gm
  5. கரிமசால்பட்டை
  6. நல்லெண்ணைய் 50Ml
  7. இஞ்சி பூண்டு 2கரண்டி
  8. மல்லி புதினா
  9. மட்டன்மசாலா 50Gm
  10. உப்புதேவையில்லை
  11. தேங்காய் அரைத்தது 2கரண்டி

வழிமுறைகள்

  1. காயவைத்து எடுத்த உப்புகண்டத்தை வெதுவெதுப்பு நீரில் பத்துநிமிடம் ஊறவிடவும்
  2. ஊறவைத்ததை 2டம்ளர் நீர் விட்டு குக்கரில் 10விசில் விடவும்
  3. சட்டியில் நல்லெண்ணைவிட்டு கரிமசால்பட்டை போட்டு நறுக்கிய வெங்காயம் மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  4. வதங்கியதும் மட்டன் மசால் வெந்தகறி சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்கவிடவும்
  5. கிரேவிபோல் வந்ததும் அரைத்த தேங்காய் புதினா மல்லி சேர்த்து கொதிவந்ததும் இறக்கவும்
  6. கறியில் உப்பு இருக்கும் அதனால் தேவையென்றால் சேர்க்கவும்
  7. அம்மாவின் கைவண்ண உப்புகண்டமசால் ரெடி
  8. இந்த பதிவிடும்போது கண்கலங்கித்தான் பதிவிட்டேன் அம்மாஞாபகத்துடன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்