வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் பிட்லா (நாகர்கோவில் ஸ்டைல்)

Photo of Bringal pitla (nagercoil style) by Krishnasamy Vidya Valli at BetterButter
133
0
0.0(0)
0

கத்திரிக்காய் பிட்லா (நாகர்கோவில் ஸ்டைல்)

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் பிட்லா (நாகர்கோவில் ஸ்டைல்) செய்முறை பற்றி

பிட்லா ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். அம்மா நாகர்கோவில் ஸ்டைலில் செயவாரகள். இதோ அந்த ரெசிபி உங்களுக்காக.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்திரிக்காய் 3 அல்லது 4
  2. புளி பாதி எலுமிச்சை அளவு
  3. உப்பு 1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி 1/8 தேக்கரண்டி
  5. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  6. துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  7. வறுத்து திரிக்க
  8. எண்ணெய் 2 டிராப்ஸ்
  9. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  10. மிளகு அரை தேக்கரண்டி
  11. மிளகாய் வத்தல் 1 அல்லது 2
  12. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  13. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  14. தாளிக்க
  15. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  16. கடுகு அரை தேக்கரண்டி
  17. மிளகாய்வற்றல் 1
  18. தேங்காய் துருவல் ஒரு மேசைக்கரண்டி
  19. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து அரைக்கவும்
  2. துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து தனியாக வைக்கவும்
  3. ஒரு கத்திரிக்காய் தவிர மற்ற கத்திரிக்காயை நறுக்கி புளியைக் கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்
  4. அரைத்த விழுது வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. வேகவைத்த பருப்பு சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தனியாக வைத்த ஒரு கத்திரிக்காயை பொடியாக நறுக்கி சேர்த்து வறுக்கவும்
  7. தாளித்து வறுத்ததை சேர்த்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்