வீடு / சமையல் குறிப்பு / கீரை சாம்பார் (நோ ஆனியன் நோ கார்லிக்)

Photo of Spinach sambar (no onion no garlic) by Krishnasamy Vidya Valli at BetterButter
619
0
0.0(0)
0

கீரை சாம்பார் (நோ ஆனியன் நோ கார்லிக்)

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை சாம்பார் (நோ ஆனியன் நோ கார்லிக்) செய்முறை பற்றி

ஆரோக்யமான இந்த கீரை சாம்பாரை அம்மா அடிக்கடி செய்வார்கள். செய்வது மிகவும் சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கீரை பொடியாக நறுக்கியது 3/4 கப்
  2. துவரம் பருப்பு 2 மேஜைக்கரண்டி
  3. புளி பாதி எலுமிச்சை அளவு
  4. உப்பு 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 1/8 தேக்கரண்டி
  6. சாம்பார் பொடி 1 1/4 தேக்கரண்டி
  7. தக்காளி ஒன்று அல்லது இரண்டு
  8. தாளிக்க
  9. எண்ணெய் 1 தேக்கரண்டி
  10. கடுகு வெந்தயம் சீரகம் தலா 1/2 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  12. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  13. மிளகாய் வற்றல் 1

வழிமுறைகள்

  1. தண்ணீர் விட்டு கீரையை வேக வைத்து மசித்து தனியாக வைக்கவும்
  2. துவரம்பருப்பை வேகவைத்து தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. புளியைக் கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிட்டு பச்சை வாசனை போனவுடன் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  4. கரைத்து வைத்த பருப்பு மசித்து வைத்த கீரை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்
  6. தாளித்து வதக்கிய தக்காளியை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்