வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் கேசரி

Photo of Pineapple kesari by Krishnasamy Vidya Valli at BetterButter
217
0
0.0(0)
0

பைனாப்பிள் கேசரி

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் கேசரி செய்முறை பற்றி

எந்த பண்டிகைக்கும் அவசரத்திற்கு அம்மா செய்யும் இனிப்பு வகைகளில் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடியாக நறுக்கிய பைனாப்பிள் கால் கப்
  2. ரவை கால் கப்
  3. சீனி 1/2 கப்
  4. நெய் 1/8 கப் +1 மேஜைக்கரண்டி
  5. கலர் 1 சிட்டிகை
  6. ஏலப்பொடி 2 சிட்டிகை (விருப்பப்பட்டால்)
  7. முந்திரிப்பருப்பு 6 முதல் 8

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் ரவையை வறுத்து தனியாக வைக்கவும்
  2. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியே வைக்கவும்
  3. மேலும் சிறிது நெய் விட்டு பைனாப்பிள் துண்டுகளை வதக்கி முக்கால் கப் தண்ணீர் விட்டு வேக விடவும்
  4. தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவை சேர்த்து கிளறவும்
  5. சீனி மற்றும் கலர் சேர்த்து கிளறவும்
  6. மீதமுள்ள நெய் முழுவதும் விட்டு சுருள கிளறி இறக்கவும் விருப்பப்பட்டால் ஏலப்பொடி சேர்க்கவும்
  7. ஏற்கனவே வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்