வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் சாம்பார் பொடி

Photo of Simple Sambar podi by Krishnasamy Vidya Valli at BetterButter
243
0
0.0(0)
0

சிம்பிள் சாம்பார் பொடி

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் சாம்பார் பொடி செய்முறை பற்றி

அம்மா பத்து நாட்களுக்கு ஒரு முறை சாம்பார் பொடி திரிப்பது வழக்கம். அப்போது தான் பிரஷ்ஷாக இருக்கும் என்று கூறுவார்கள். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு பத்து நாட்களுக்கு வரும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லி விதை 1/2 கப்
  2. கடலைப்பருப்பு கால் கப்
  3. துவரம் பருப்பு 1/8 கப்
  4. வெந்தயம் ஒரு மேசைக்கரண்டி
  5. கட்டிப் பெருங்காயம் ஒரு துண்டு
  6. மிளகாய்வற்றல் 15 முதல் 20
  7. மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் பொடி சிறிது
  8. எண்ணெய் இரண்டு சொட்டுகள்
  9. கருவேப்பிலை 3 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் கொத்தமல்லி விதை கடலைப்பருப்பு துவரம்பருப்பு வெந்தயம் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்
  2. எண்ணை விட்டு பெருங்காயம் மிளகாய் வற்றல் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்
  3. எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்
  4. மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் திரிக்கவும்
  5. தண்ணீர் படாமல் ஒரு டப்பாவில் வைத்து பயன்படுத்தவும். பிரஷ்ஷான மணமணக்கும் சாம்பார் பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்