வீடு / சமையல் குறிப்பு / உளுந்துமாவு பாயாசம்

Photo of Orid dhall payasam by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
899
0
0.0(0)
0

உளுந்துமாவு பாயாசம்

Dec-11-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்துமாவு பாயாசம் செய்முறை பற்றி

கஞ்சி பாயாசம் எப்படிவேனா சொல்லலாம் இனிப்பு சேர்த்தும் சேர்க்காமலும் செய்யலாம் வயதுவந்த எல்லோரும் சாப்பிடலாம் எலும்புதேய்மானம் குறுக்குவலி மாதவிடாய்சோர்வு நீக்கும் அம்மா உளுந்தில் களி சோறு சத்துமா இட்டிலி பொடி செய்து கொடுப்பாங்க அம்மா இல்லை அவங்க சொல்லிய சமையல் நினைவில் இருக்கு மகளுக்கும் செய்து கொடுக்கின்றேன்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்தம்பயறு 1கப்
  2. வெல்லம் 1/4kg
  3. முந்திரி10
  4. ஏலக்காய் 3
  5. தேங்காய் 1/2மூடி
  6. நெய்2கரண்டி
  7. வறுத்தகடலை 1கரண்டி

வழிமுறைகள்

  1. உளுந்தைகழுவி நன்கு காயவைத்து எடுத்து மிதமான தீயில் ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுத்து ஆறவிடவும்
  2. ஆறியதும் மிக்சியில் பொடியாக அரைத்துவைக்கவும்
  3. ஒருகப் மாவிற்கு 4கப் தண்ணீர் கணக்கு
  4. தண்ணீரை கொதிக்கவிட்டு மாவை கரைத்து அதில் விட்டு கெட்டிபடாமல் கிண்டவும்
  5. நன்கு வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்
  6. தேங்காய் பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து அதில் முந்திரி கடலைசேர்த்து வறுத்து போடவும்
  7. விருப்பபட்டால் பால் சேர்க்கலாம்
  8. சூடாக சாப்பிட்டால் ஒரு சுவை குளிரவிட்டு சாப்பிட்டால் தனிச்சுவை
  9. இனிப்பு போடாமல் சீரகம் பூண்டு சேர்த்து கஞ்சி போல் குடிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்