வீடு / சமையல் குறிப்பு / மிளகு சம்பா

Photo of Milagu samba by Krishnasamy Vidya Valli at BetterButter
755
0
0.0(0)
0

மிளகு சம்பா

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மிளகு சம்பா செய்முறை பற்றி

தோசை மாவு முடிந்த காலையில் டிபனுக்கு அம்மா இந்த மிளகு சம்பா செய்வார்கள். நாங்கள் எல்லாம் இதை "பொங்கலுக்கு கஸின் ஸிஸ்டர்" என்று அழைப்போம். செய்வது மிகவும் எளிது. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. சூடாக அப்படியே சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சம்பா பச்சரிசி அரை கப்
  2. உப்பு 1/4 தேக்கரண்டி
  3. சீரகம் ஒரு தேக்கரண்டி மிளகு அரை தேக்கரண்டி இரண்டையும் ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும்
  4. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  5. நெய் 1 அல்லது 2 மேஜைக்கரண்டி
  6. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து அளவாகத் தண்ணீர் விட்டு குக்கரில் குழையாமல் வேக வைத்து எடுக்கவும்
  2. சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும் அதில் நெய் மிளகு ஜீரகம் ஒன்றிரண்டாகத் தட்டியது உப்பு பெருங்காயம் கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு கலக்கவும்
  3. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்