வீடு / சமையல் குறிப்பு / வஞ்சிரம் மீன் குழம்பு

Photo of King fish curry by Wahida Abdul Hameed at BetterButter
619
0
0.0(0)
0

வஞ்சிரம் மீன் குழம்பு

Dec-11-2018
Wahida Abdul Hameed
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வஞ்சிரம் மீன் குழம்பு செய்முறை பற்றி

என் அம்மாவின் கைவண்ணத்தில் எனக்கு மிகவும் பிடித்த குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வஞ்சிரம் மீன் அரை கிலோ
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. குழம்பு மசாலா பவுடர் 5 ஸ்பூன்
  5. புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. பச்சை மிளகாய் ஒன்று
  8. வெந்தயம் அரை ஸ்பூன்
  9. நல்ணெ்ணெய் தேவையான அளவு
  10. உப்பு ருசிக்கேற்ப
  11. அரைத்த தேங்காய் விழுது ஒரு கப்

வழிமுறைகள்

  1. ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளித்து.
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக கிளறி புளிக்கரைசலை ஊற்றவும்.
  3. அதனுடன் தேவையான அளவு உப்பு, குழம்பு மசாலா பவுடர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்த உடன் சுத்தம் செய்த மீன் துண்டுகளை மெதுவாக போடவும்.
  4. மீனை போட்டோவுடன் கரண்டி வைத்து கிளறாமல் அப்படியே மூடி போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
  5. மீன் வெந்தவுடன் இறுதியாக அரைத்த தேங்காய் விழுதை குழம்பில் சேர்த்த லேசாக கிளறி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும் சுவையான மீன் குழம்பு தயார்.
  6. குழம்பு மசாலா பவுடர் எப்படி செய்வது என்று ஏற்கனவே ரெசிபி கொடுத்துள்ளேன் அந்த மசாலா போட்டு மீன் குழம்பு வைத்தால் மிகவும் சுவையாகவும் மனமாகவும் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்