வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் ரசம்

Photo of Pineapple rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
491
0
0.0(0)
0

பைனாப்பிள் ரசம்

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் ரசம் செய்முறை பற்றி

எனக்கு பைனாப்பிள் ரொம்ப பிடிக்கும் என்பதால் பைனாப்பிள் சீசனில் அம்மா செய்யும் ரசம் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடியாக நறுக்கிய பைனாப்பிள் அரை கப்
  2. தக்காளி-2
  3. ரசப் பொடி ஒரு தேக்கரண்டி
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  8. தாளிக்க
  9. நெய் ஒரு தேக்கரண்டி
  10. கடுகு கால் தேக்கரண்டி
  11. மிளகு சீரகம் ஒன்றிரண்டாக தட்டியது அரை தேக்கரண்டி
  12. மிளகாய்வற்றல் 1
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  14. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து பாதியளவு பைனாப்பிள் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. துவரம் பருப்பை தனியாக வேக வைத்து எடுக்கவும்
  3. மீதமுள்ள ஒரு தக்காளி மற்றும் பைனாப்பிள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. வதக்கியதுடன் அரைத்த விழுது மஞ்சள் பொடி ரசப்பொடி உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  6. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்