வீடு / சமையல் குறிப்பு / அம்மாவின் ஸ்பெஷல் சேனைக்கிழங்கு கீரை வடை

Photo of Mom's Special Yam Green's Vada. by Jayanthy Asokan at BetterButter
504
0
0.0(0)
0

அம்மாவின் ஸ்பெஷல் சேனைக்கிழங்கு கீரை வடை

Dec-11-2018
Jayanthy Asokan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அம்மாவின் ஸ்பெஷல் சேனைக்கிழங்கு கீரை வடை செய்முறை பற்றி

அம்மாவின் ஸ்பெஷல் சேனைக்கிழங்கு கீரை வடையில் பொட்டுக்கடலை மாவு மற்றும் சிறிது கடலை மாவு சேர்த்து வேகவைத்த சேனைக்கிழங்கு மற்றும் கீரைகளை கொண்டு செய்யப்படும்.மிகவும் ருசியாகவும் மொருமொருபாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேனைக்கிழங்கு 1\4 கிலோ
  2. அரைக்கீரை 3 கைப்பிடி
  3. பொடியாக அரிந்த வெங்காயம் 1
  4. பொட்டுக்கடலை 1 கப்
  5. கடலை மாவு 2 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை 2 கொத்து
  7. காய்ந்த மிளகாய் 6
  8. சோம்பு 1 தேக்கரண்டி
  9. பட்டை 1 துண்டு
  10. லவங்கம் 2
  11. உப்பு தேவைக்கு ஏற்ப
  12. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. சேனைக் கிழங்கை நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்
  2. கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ளவும்
  3. வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. மிக்ஸியில் சோம்பு காய்ந்த மிளகாய் லவங்கப் பட்டையை நன்கு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
  5. அதே மிக்ஸியில் பொட்டுக்கடலையை நன்கு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
  6. வேக வைத்த சேனைகளுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கீரை சேர்க்க வேண்டும்.
  7. இதனுடன் பொடித்து வைத்த பொருட்களை தேவைகேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  8. கலந்து பின் சிறிது கடலை மாவு சேர்க்க வேண்டும்.
  9. சிறு உருண்டைகளாக பிடித்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
  10. இதுவே அம்மாவின் ஸ்பெஷல் சேனைக்கிழங்கு கீரை வடையாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்