வீடு / சமையல் குறிப்பு / கம்பு பரங்கி அடை

Photo of Pearl Millet Pumpkin Adai by Sowmya Sundar at BetterButter
399
1
0.0(0)
0

கம்பு பரங்கி அடை

Dec-11-2018
Sowmya Sundar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு பரங்கி அடை செய்முறை பற்றி

கம்பு அடையில் பரங்கிக்காய் துருவல் சேர்த்து செய்யும் அம்மா ஸ்பெஷல் டிபன் இது. அடையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதற்கு பதில் பரங்கிக்காய் துருவலுடன் சாப்பிட்டால் தனி சுவை தான் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு ஒரு கப்
  2. இட்லி அரிசி ஒரு கப்
  3. கடலைப்பருப்பு முக்கால் கப்
  4. துவரம் பருப்பு கால் கப்
  5. உளுத்தம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  6. பரங்கிக்காய் துருவல் ஒரு கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகாய்வற்றல் 6
  9. பச்சை மிளகாய்-2
  10. இஞ்சி ஒரு துண்டு
  11. பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்
  12. இட்லி மிளகாய் பொடி 3 டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை மல்லி சிறிதளவு
  14. நல்லெண்ணெய் அடை வார்க்க

வழிமுறைகள்

  1. கம்பு, இட்லி அரிசி மற்றும் பருப்பு வகைகளை தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.பின் தண்ணீரை வடித்து தனியாக வைத்து கொள்ளவும்
  2. இதனுடன் மிளகாய் வற்றல், உப்பு ,பச்சை மிளகாய் ,இஞ்சி பெருங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. தோசைக்கல் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை கனமான அடையாக வார்த்து அதன் மேல் பரங்கிக்காய் துருவலை தூவவும்.பின் அதன் மேல் இட்லி பொடி தூவவும்
  4. சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு இரு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
  5. இதே போல் அனைத்து அடைகளும் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்