வீடு / சமையல் குறிப்பு / குடல் மசாலா

Photo of Mutton Intestine Masala by Sumaiya shafi at BetterButter
1192
0
0.0(0)
0

குடல் மசாலா

Dec-11-2018
Sumaiya shafi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குடல் மசாலா செய்முறை பற்றி

ஆட்டுக்குடல் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்குடல் ஒரு கிலோ
  2. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  4. பட்டை இரண்டு துண்டு
  5. லவங்கம் 4
  6. ஏலக்காய்-3
  7. பச்சை மிளகாய்-2
  8. பிரியாணி இலை இரண்டு
  9. வெள்ளை கத்திரிக்காய் 2
  10. காஷ்மீர் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  11. குழம்பு மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  12. எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. மஞ்சள் தூள் 3 டீஸ்பூன்
  15. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  16. தேங்காய்ப்பால் 2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஆட்டுக்குடல் சூடு தண்ணீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின் அதை தயிர் ,உப்பு மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் ,ஏலக்காய்,பிரியாணி இலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விடவும்
  6. பிறகு சிவப்பு மிளகாய்த்தூள் எண்ணெய்யில் சேர்த்து கிளறவும்
  7. தயிர் சேர்த்து கிளறி வைத்த குடல்லை அதில் சேர்க்கவும்
  8. கடைசியில் தேங்காய் பால் சேர்த்து 15 முதல் 20 விசில் வரை விடவும்.
  9. குக்கரை திறந்து கத்திரிக்காயை அதில் சேர்த்து 3 விசில் போட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்