வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்காய் பொரியல்

Photo of Drumstick Poriyal by Jayasakthi Ekambaram at BetterButter
691
0
0.0(0)
0

முருங்கைக்காய் பொரியல்

Dec-11-2018
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்காய் பொரியல் செய்முறை பற்றி

முருங்கைக் காயுடன் வெங்காயம் தக்காளி தேங்காய் துருவல் சேர்த்து செய்யும் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்காய் நான்கு
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  5. குழம்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  10. உப்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  11. சமையல் எண்ணெய் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி முருங்கைக்காய் நறுக்கிக் கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்
  3. எண்ணெய் சூடானதும் கடுகு சீரகம் தாளிக்கவும்
  4. பிறகு வெங்காயம் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்
  5. தக்காளி வதங்கிய பிறகு முருங்கைக்காயை போட்டு வதக்கவும்
  6. மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு தூள் சோம்பு தூள் சேர்க்கவும்
  7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மூடி வைத்து சிறிய தீயில் வைத்து வேக வைக்கவும்
  8. காய் வெந்து தண்ணீர் சுண்டியதும் தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
  9. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்